Friday, May 6, 2011

சிவகாசி பட்டாசு தயாரிப்பதில் இந்தியாவில் முதலிடம்
அச்சு தொழிலில் முதலிடம்
லஞ்சம் வாங்குவதிலும் சிவகாசி முதலிடம்

சிவகாசியில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது
சிவகாசியில் லஞ்சம் வாங்கும் அரசு அலுவலங்கள்.... என் அனுபவத்தில் லஞ்சத்தினால் நான் பெற்ற பல இன்னல்கள்....
நான் இப்ப அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் படித்து வருகிறேன் எனக்கு பாஸ் போர்ட் விண்ணபிக்க பிறப்பு சான்றிதல் கேட்டாங்க... அதனால தான் எனது பிறப்பு சான்றிதழ் வாங்க.... சிவகாசி தாலுகா அலுவலகம் சென்றேன். எனது பிறப்பு சான்றிதல் பிறந்த உடன் பதிய வில்லை அதனால் நீங்க நிதி மன்றத்தில் நகராச்சின் மிது வழக்கு தொடர்து தன சான்றிதல் வாங்க முடியும் நு சொல்லிட்டாங்க... பிறகு

கிராம நிர்வாக அலுவலகம்,
வருவாய் ஆய்வாளர்
வட்டாச்சியர்

இவங்க மூன்று பேர் கிட்டேயும்.... கையெழுத்து வாங்க நான் அலகலிக்க பட்டேன்...பிறப்பு சான்றிதல் வாங்க அலைஞ்ச பட்ட பாடு ஐயோ... இந்த உலகத்துல ஏன்டா பிறந்தோம்னு போச்சு... எதோ படிக்கச் போய் கொஞ்சம் விவரம் தெரித்தது அலைஞ்சு வாங்கிட்டேன்.... அதுக்கு லஞ்சம் மட்டும் 1000 ரூபாய் கொடுத்துருப்பேன்...
VAO :
VAO கிட்ட போன VAO வாங்க மாட்டரு ஆன VAO அல்ல கை தலையாரி வாங்குவான்.. ஒரு கையெழுத்துக்கு 50 ரூபாய் வாங்குவாங்க....
RIO :
வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கையெழுத்து வாங்க போன வருவாய் ஆய்வாளர் லஞ்சம் வாங்க மட்டாரு ஆனா அவருடைய அல்ல கை வாங்குவன்... லஞ்சம் வாங்குறது வருவாய் ஆய்வாளர்க்கு தெரிஞ்சு தான் நடக்குது...
வட்டாச்சியர் :
எல்லார் கிட்டையும் கையெழுத்து வாங்கிட்டு கடைசியா தாசில்தார் கிட்ட கையெழுத்து வாங்கணும்
வட்டாச்சியர் அலுவலகம் போன வட்டாச்சியர பாக்கவே முடியாது.. ஆனாஎழுத்தர் (clerk எதோ கலெக்டர் வேல பாகுரோம்னு மனசுல நெனப்பு..) தான் எல்லாமே
அவர் கிட்ட மனுவ கொடுத்த .....போயிட்டு நாளைக்கு வானு சொல்லுவார் மறு நாள் வந்த... ஐயோ இன்னும் தாசில்தார் இடத்துலேயே உட்கரலை சாயங்காலம் 5 மணிக்கு வாங்கனு சொல்லுவாரு (இவருக்கு ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்த உடனே கொடுத்துருவார்
எப்படியும் லஞ்சம் கொடுத்து சான்றிதழ்வாங்கிரலாம்...
சான்றிதழ்ல தமிழ்நாடு கோபுர சீல் வாங்கணும் அதுக்கு 20 ரூபா லஞ்சம் ம்ம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் ...... .

அராசங்கதுல வேல பாத்து கிட்டு (நமக்காகத்தான் வேல பாக்குறாங்க ஆனா நம்ம கிட்டையும் பணம் லஞ்ச பணம் வாங்குறாங்க... இந்த கேவலமான புலபுக்கு பிச்ச எடுத்து சப்பிட்டுறலாம்...( பிச்சகாரன் குட கெளரவம பிச்ச எடுத்து சாப்பிடுறான் ஆனா அரசு உழியர இருந்து கிட்டு என் இப்படி பிச்ச எடுகுறன்களோ.... இந்த புலபுக்கு செத்து போயிரு....)
லஞ்சம் கொடுக்க முடியாதுன்னு சொன்ன சான்றிதல் தராம அலைய விடுறாங்க ....நீ வாங்குற இந்த லஞ்ச பணம் கடைசி வரைக்கு நிலைக்காது....
நான் எனக்காக சொல்ல விரும்பல


சிவகாசியில் அதிகமா கூலி தொழில் செய்றவங்க தான் இருகாங்க... FIRE OFFICE , PRINTING PRESS , இவங்க எல்லாருக்கும் சம்பளம் ஒரு நாளைக்கு 100 தான் இருக்கும் இல்ல 150 (COMPANY சம்பளம்னா 80 ரூபா தான் )
அவங்க ஒரு நாள் வேளைக்கு போகமா (பிறப்பு சன்றிதலோ ,இறப்பு சன்றிதலோ ,வருமான சன்றிதலோ , சாதி சன்றிதலோ , எதோ வாங்க அலைரங்க அவங்க கிட்ட லஞ்சம் கேட்குறது... அதன் எனக்கு பிடிக்கல ...

நீ ஒரு நாளைக்கு FIRE OFFICE லையோ அல்லது பிரிண்டிங் பிரஸ் லையோ வேல பாரு அப்ப தெரியும் 100 ரூபா சம்பளம் வாங்க எவ்வளவு கஷ்டம் படனும்னு....
நீ பேன்ல உட்காந்து வேல பாத்து கிட்டு அரசு கிட்டையும் சம்பளம் வங்கி கிட்டு மக்கள் கிட்டையும் பணம் வாங்குற


தொடரும்....

03 .05 .2011